ரீசார்ஜ் செய்து தான் மது குடிக்க முடியும்...புதிய திட்டம்.! திட்டத்தின்படி 25 வயது நிரம்பியவருக்கு மட்டுமே மது வழங்கப்படும்..!!
ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.




ஆந்திர மாநில அரசு அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக பல மேற்கொள்ளப்படுகிறது நடவடிக்கைகள், அந்த வகையில் லிக்கர் கார்ட் என்ற மைக்ரோசிப் பொருத்தப்பட்ட கார்ட் ஒன்றை அம்மாநில அரசு அறிமுகபடுத்த முடிவு செய்துள்ளது.


இந்த திட்டத்தின்படி 25 வயது நிரம்பியவருக்கு மட்டுமே மது வழங்கப்படும்.


 





 

இந்த லிக்கர் கார்டை, ஆதார் மற்றும் பேன் கார்ட் நகலை கொடுத்து பெற்று கொண்டு ஐந்தாயிரம் ருபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






மேலும், இந்த லிக்கர் கார்ட் என்ற மைக்ரோசிப் கார்டை கொண்டு நாள் ஒன்றுக்கு ஒருநபரால் 3 பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும், கூடிய விரைவில் இந்தத்திடம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. 



ஆந்திராவில் ஏற்கனவே மது விலையை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை 23 சதவீதம் குறைந்திருப்பதாகவும் பீர் விற்பனை 54 சதவீதம் குறைந்திருப்பதாகவும் ஆந்திரா அரசு தெரிவித்துள்ளது.