சென்னை: ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேகுகளை உருவாக்கி இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். தலைவர் 168 படத்தின் பூஜையை நேற்று போட்டு ரஜினியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய சன் பிக்சர்ஸ், தற்போது, தலைவர் 168 குறித்த மறைமுக அப்டேட் ஒன்றையும் அதன் மாஷ் - அப் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.
தர்பார் டீஸர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தடுத்து அப்டேட்களையும் அதிரடிகளையும் சன் பிக்சர்ஸ் காட்டி வரும் நிலையில், ரசிகர்கள் கேமராவை அப்படியே லைகா புரொடக்ஷன் பக்கம் திருப்பி கேள்வி எழுப்பி வருகின்றனர். தர்பார் படம் வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், இன்றாவது படத்தின் டீஸர் வெளியாகுமா என ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்..
தலைவர் 168 சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் 168வது படம் உருவாகவுள்ளது. அதற்கான படபூஜை நேற்று போடப்பட்டது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினியின் எவர்க்ரீன் ஹீரோயின்களான மீனா மற்றும் குஷ்பு நடிக்கின்றனர். காமெடிக்கு சூரி மற்றும் சதீஷ் இணைந்துள்ளனர். இமான் இசையமைக்கிறார். வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாஷ் – அப் சூப்பர்ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே கேக் வெட்டி கொண்டாடிய சன் பிக்சர்ஸ், தற்போது ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான மாஷ் - அப் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த படங்களின் மாஸ் கலவையை பக்காவாக செதுக்கி ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
என்ன அப்டேட் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 168' படத்தின் கதை எப்படி இருக்கும் என்பதை இந்த மாஷ் - அப் வழியாக மறைமுகமாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது. அது என்னவென்றால், மாஷ் அப்பின் இறுதியில் முத்து படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. முத்து படத்தை போல, ரஜினியின் 168வது படம் காமெடி கமர்ஷியல் என்டர்டெயினராகவும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டபுல் ரோலில் நடிக்கவுள்ளார் என்ற தகவலைத்தான் சன் பிக்சர்ஸ் மறைமுகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.